தானா சமைத்து வீணாக்காமல் சாப்பிடும் மக்களுக்கு இந்த ஆம்லெட்.
தேவையான பொருட்கள்
வேகவைத்து மசித்த உருளைகிழங்கு - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரைகப்
தக்காளி பொடியாக நறுக்கியது - கால் கப்
பச்சைமிளகாய், கொத்தமல்லிதழை மிகப்பொடியாக நறுக்கியது.
முட்டை - 3
மிளகு பொடி - ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
முட்டையை உப்பு, மிளகாய்தூள் சேர்த்து
நன்றாக நுரை வரும்படி அடித்துக்கொள்ளவும்
ஒரு நான் ஸ்டிக் பானில் சிறிது
எண்ணெய் தடவி முட்டையை ஒரு
லேயர் ஊற்றவும்
அதன் மேல் வெங்காயம், தக்காளி,உருளைக்கிழங்கு, மல்லித்தழைம்
சிறிது மிளகுதூள் தூவி அதன் மேல் இன்னொரு லேயர் முட்டையை ஊற்றவும்.
மிக சன்னமான தீயில் மூடி போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும்
மறுபடியும் திருப்பி போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
பொன்னிற ஆம்லெட் நல்ல வாசனையோடு ரெடி
குறிப்பு
இந்த ஆம்லெட் ஒரு ஃபுல் மீல் வகையை சார்ந்தது. அப்படின்னா இதுக்கு முன்னாடி பின்னாடி எதுவும் சாப்பிட தேவையில்லைன்னு அர்த்தம்.
துண்டுகளாக கட் பண்ணி ப்ரெட் ஆம்லெட் செய்யலாம்
மூடி வைப்பதாலும் சன்னமான தீயில் வேகவைப்பதாலும் முட்டை நன்கு வெந்தும் உருளைகிழங்கு மிருதுவாகவும் இருக்கும்
ஹேப்பி குக்கிங் :)
தேவையான பொருட்கள்
வேகவைத்து மசித்த உருளைகிழங்கு - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரைகப்
தக்காளி பொடியாக நறுக்கியது - கால் கப்
பச்சைமிளகாய், கொத்தமல்லிதழை மிகப்பொடியாக நறுக்கியது.
முட்டை - 3
மிளகு பொடி - ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
முட்டையை உப்பு, மிளகாய்தூள் சேர்த்து
நன்றாக நுரை வரும்படி அடித்துக்கொள்ளவும்
ஒரு நான் ஸ்டிக் பானில் சிறிது
எண்ணெய் தடவி முட்டையை ஒரு
லேயர் ஊற்றவும்
அதன் மேல் வெங்காயம், தக்காளி,உருளைக்கிழங்கு, மல்லித்தழைம்
சிறிது மிளகுதூள் தூவி அதன் மேல் இன்னொரு லேயர் முட்டையை ஊற்றவும்.
மிக சன்னமான தீயில் மூடி போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும்
மறுபடியும் திருப்பி போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
பொன்னிற ஆம்லெட் நல்ல வாசனையோடு ரெடி
குறிப்பு
இந்த ஆம்லெட் ஒரு ஃபுல் மீல் வகையை சார்ந்தது. அப்படின்னா இதுக்கு முன்னாடி பின்னாடி எதுவும் சாப்பிட தேவையில்லைன்னு அர்த்தம்.
துண்டுகளாக கட் பண்ணி ப்ரெட் ஆம்லெட் செய்யலாம்
மூடி வைப்பதாலும் சன்னமான தீயில் வேகவைப்பதாலும் முட்டை நன்கு வெந்தும் உருளைகிழங்கு மிருதுவாகவும் இருக்கும்
ஹேப்பி குக்கிங் :)
18 கருத்துகள்:
அருமையான கட்டுரை :)
Good keep posting like these types only :)))
இந்த உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கிறதுக்கும் ரெசிப்பி போட்டிங்கன்னா முழுமையடையும்.
ரியலி நைஸ் விஜி இன்ரஸ்டிங்....செய்துடுவோம்,,
கண்ணா நன்றி :)
சிங்கை தேங்க்ஸ்ங்க :)
டமிலு.. ம்ம்க்கும் நீ அப்படியே உடனே செய்துட்டாலும் :) நம்பிட்டேன்
தினேஷ்.. அடுத்த போஸ்ட்டுக்கு ஐடியா கொடுத்ததற்கு நன்னி :)
அட நல்ல ரெசிப்பியாட்டம் இருக்கே. செய்து பார்த்துடலாம்னா... நாங்க வீர சைவமாச்சே... சரி அடுத்தது ஒரு சைவ சமையல் எடுத்து உடுங்க...
சிறப்பான பதிவு விஜி!
ட்வுட் 1: நான் ஸ்டிக்ல எதுக்காக எண்ணெய் விடனும்? டவுட் 2: 3முட்டை + உருளைக்கிழங்கு - இது அதிகமான கொழுப்பு சத்துள்ள உணவாகாதா?
(சமீபமாக சமையல் கற்று வருவதால் இவை உணமையான டவுட்டுகள்)
யாருங்க படம் எடுத்தது ? Professional food photographer எடுத்தது மாதிரி இருக்கு. ஏற்கனெவே செஞ்சு சாபிடறதுதான்! உ.கி. சேர்ப்புதான் வித்தியாசம். எப்பொழுதும்போல நல்ல டிப்ஸ் - ( மூடி வைப்பதாலும் சன்னமான தீயில் வேகவைப்பதாலும் முட்டை நன்கு வெந்தும் உருளைகிழங்கு மிருதுவாகவும் இருக்கும் )
வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு போரடிச்சுபோயிருந்த எனக்கு இது சூப்பரான ரெசிபி.
@வல்லமை :) சைவம்தான் அதிகம் வரும். முட்டையை சைவத்தில சேர்த்துட்டாங்க தெரியாதா?
தங்கமணி அண்ணா, நான் ஸ்டிக்கில் எண்ணெய் ஊற்ற சொல்லலையே. லேசா தடவத்தான் சொல்லிருக்கேன். எந்த உணவானாலும் கொஞ்சம் எண்ணெய்பசை இருந்தால் தான் அதற்கு முழு சுவை வரும்.
உருளைகிழங்கு கொழுப்பு சத்துதான். அதற்குதான் இதை முழு உணவுன்னு சொல்லிருக்கேன். இதற்கு மேல் எதுவும் வேண்டாம், இதுவே போதும்னு :) அதுசரி நீங்க சமைக்கறீங்களா? எ.கொ.இ ? :)
அறிவுக்கரசு சார். ஆம்லெட் போடும் போது போட்டா எடுக்க ஆளா வைக்க முடியும் :) நான் தான்.. வேற வழியில்லை நம்பிடுங்க
nice dish. thanks
என்னோட முதல் கமெண்ட் எங்கே ?
idhu vathu muttaya? illai kozhi muttaya??
கருத்துரையிடுக
நான் டெஸ்டும் டேஸ்டும் பண்ணியாச்சு, நீங்க ?