சிற்றுண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிற்றுண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 02, 2011

மசாலா ஆம்லெட்/ஃப்ரெஞ்ச் ஆம்லெட்

தானா சமைத்து வீணாக்காமல் சாப்பிடும் மக்களுக்கு இந்த ஆம்லெட். 

தேவையான பொருட்கள்

வேகவைத்து மசித்த உருளைகிழங்கு - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரைகப்
தக்காளி பொடியாக நறுக்கியது - கால் கப்
பச்சைமிளகாய், கொத்தமல்லிதழை மிகப்பொடியாக நறுக்கியது.
முட்டை - 3
மிளகு பொடி - ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு


செய்முறை

முட்டையை உப்பு, மிளகாய்தூள் சேர்த்து
நன்றாக நுரை வரும்படி அடித்துக்கொள்ளவும்





ஒரு நான் ஸ்டிக் பானில் சிறிது
எண்ணெய் தடவி முட்டையை ஒரு
லேயர் ஊற்றவும்




அதன் மேல் வெங்காயம், தக்காளி,உருளைக்கிழங்கு, மல்லித்தழைம்
சிறிது மிளகுதூள் தூவி அதன் மேல்  இன்னொரு லேயர் முட்டையை ஊற்றவும்.

 

மிக சன்னமான தீயில் மூடி போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும்




மறுபடியும் திருப்பி போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
பொன்னிற ஆம்லெட் நல்ல வாசனையோடு ரெடி



குறிப்பு

இந்த ஆம்லெட் ஒரு ஃபுல் மீல் வகையை சார்ந்தது. அப்படின்னா இதுக்கு முன்னாடி பின்னாடி எதுவும் சாப்பிட தேவையில்லைன்னு அர்த்தம்.

துண்டுகளாக கட் பண்ணி  ப்ரெட் ஆம்லெட் செய்யலாம்

மூடி வைப்பதாலும் சன்னமான தீயில் வேகவைப்பதாலும் முட்டை நன்கு வெந்தும் உருளைகிழங்கு மிருதுவாகவும் இருக்கும்


  
ஹேப்பி குக்கிங் :)

செவ்வாய், நவம்பர் 29, 2011

வெங்காய சமோசா / பப்ஸ்

பப்ஸ் என்று பொதுவில் சொல்லப்படும் வெங்காய சமோசா எல்லாருக்கும் பிடித்த சிற்றுண்டி. இதில் நடுவில் வைக்கப்படும் பூரணம்./ஸ்டஃபிங் உங்கள் விருப்பபடி  மாற்றிக்கொள்ளலாம்.

மேல் மாவுக்கு தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு கப்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் ஒரு பெரிய டேபிள் ஸ்பூன்

சப்பாத்தி மாவு பதத்திற்கு சிறிது கெட்டியாக மாவு பிசைந்து குறைந்தது அரைமணி நேரம் மூடிவைக்கவும்.

ஸ்டஃபிங்
பெரிய வெங்காயம் -6 -மிகப்பொடியாக நறுக்கியது
எலுமிச்சம்பழ ஜூஸ் - ஒரு ஸ்பூன்
மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்
கரம்மசாலாதூள்- அரை ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லிதழை- பொடியாக நறுக்கியது
இவை அனைத்தும் பச்சையாக கலந்து வைக்கவும். வெங்காயம் வதக்க தேவையில்லை.



சமோசா செய்முறை


1. மைதா மாவு ஒரு ஸ்பூன் எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பசை போல 
  கலந்து வைக்கவும்

2. மேல்மாவை சிறிது எடுத்து மிக மெல்லிய சப்பாத்தியாக இட்டு அடுப்பில் மிக லேசாக சூடு பண்ணவும். வேக வைக்க வேண்டாம். லேசாக சூடுபடுத்தினால் அதை மடிப்பது சுலபமாகும், ஒன்றோடு ஒன்று ஒட்டாது.








3.ஒரு சப்பாத்தியை இரண்டாக வெட்டி முனையை சுற்றிலும் மைதா பேஸ்ட் தடவவும், அதை ஒரு முனையில் இருந்து சுற்றினால் முக்கோன வடிவம் வரும்





4.உள்ளே வெங்காய மசாலாவை வைத்து மைதா பேஸ்ட் தடவி மடிக்கவும்.





5.எல்லா சமோசாவும் தயார் செய்த பிறகு எண்ணெய் காய வைத்து பொரித்து எடுக்கவும்







குறிப்பு

1.எண்ணெய் அதிக சூடாக இருக்க கூடாது, அப்படி இருந்தால் சமோசா கருகி விடும், உள்ளே இருக்கும் வெங்காயம் வதங்காது




2.ஒரு முறை பொரித்து எடுத்த பின் மறுபடியும் 5 நிமிடம் கழித்து  மறுபடியும் பொரித்தால் அழகான பொன் நிறத்தில் இன்னும் மொறுமொறுப்பாக இருக்கும்.

3.ஸ்டப் செய்ய உருளைகிழங்கு, கேரட், பட்டாணி எது வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.


 ஹேப்பி குக்கிங் :)