வெள்ளி, டிசம்பர் 16, 2011

வெங்காய பூண்டு புளிக்குழம்பு

புளிக்குழம்புக்கு இணையான ருசியான உணவு எதுவும் இல்லை. சூடான சாதம் அதில் புளிக்குழம்பு கூடவே சின்ன உருளைக்கிழங்கு வறுவல்.. ம்ம்ம் நல்ல காம்பினேசன். கொஞ்சம் கேரட் பச்சடியும் இருந்தா இன்னும் சூப்பர்.

தேவையான பொருட்கள்


சின்ன வெங்காயம் - ஒரு கப்
பூண்டு - அரை கப்
புளி கரைசல் கெட்டியாக கரைத்தது - அரைகப்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிள்காய் தூள் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லித்தூள் - ரெண்டு ஸ்பூன்
ஒரு துளி பெருங்காயம்
அரைக்க 
தேங்காய் - இரண்டு பெரிய ஸ்பூன்
வெந்தயம் - சிறிது

தாளிக்க 
கடுகு - சிறிது
வெந்தயம் - சிறிது
சீரகம் - ஒரு சிட்டிகை
வரமிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம், மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்


 


புளி கரைசலை ஊற்றி ஒரு கொதி வந்ததும், மி.தூள், ம.தூள், கொ.மல்லிதூள். பெருங்காயம் உப்பு போட்டு இன்னொரு கொதி விடவும்


 


இப்போது குழம்பு சிறிது கெட்டிப்பட்டதும் தேங்காய் விழுது சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்.

குறிப்பு

தாளிக்க சன்ஃபளவர் ஆயிலை விட நல்லெண்ணெய் நல்லது

தேங்காய் தேவைப்பட்டால் போடலாம். அளவு குறைவாக வேண்டும் எனில் தேங்காய் தேவையில்லை. முடிந்தவரை தவிர்க்கலாம்.

வெந்தயம் போட்டு தாளித்தால் மட்டுமே புளிக்குழம்பின் மணம் வரும்.

மண்சட்டியில் செய்வதால் இரண்டு நாட்களுக்கு கூட ஃப்ரிட்ஜில் வைக்காமல் வைத்துக்கொள்ளலாம்.
 

ஹேப்பி குக்கிங்
ஞாயிறு, டிசம்பர் 11, 2011

தந்தூரி சிக்கன்

வீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்ய ஈசியான ரெசிபி இது. ரொம்ப நாளா குட்டிஸுக்கு தந்தூரி சிக்கன், இல்லனா கபாப் செய்து கொடுக்கனும்னு நினைச்சுட்டே இருந்தேன். நான்ஸ்டிக் தவாவில் பனீர் கபாப் செய்வேன். ஆனால் சிக்கன் அப்படி செய்ய முடியாதே. தந்தூரி சிக்கன் ரொம்ப ஈசிதான். டேஸ்ட் நல்லா இருந்ததுன்னு பப்பு சொன்னா :) (பப்புவே சொன்னான்னு இருக்கனும்:)) )

தேவையான பொருட்கள்:

சிக்கன் பீஸ் - 8
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
லெமன் ஜூஸ் - 2 ஸ்பூன்
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
கெட்டிதயிர் - அரைக்கப்
இஞ்சிபூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லிதூள் - ஒரு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு


பொடிக்க
சீரகம் - ஒரு ஸ்பூன்
மிளகு - ஒரு ஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை (கஸூரி மேத்தி) ஒரு ஸ்பூன்


இவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்
செய்முறை


சிக்கனை கழுவி சுத்தம் செய்து, ஒரு சில இடங்களில் கத்தியில் கீறி  வைக்கவும்

ஒரு ஸ்பூன் மிள்காய் பொடி, உப்பு, ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் விட்டு பேஸ்ட் போல செய்து சிக்கனில் கீறல் போட்ட இடங்களில் தடவி வைக்கவும்


 

ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர், மி.தூள், உப்பு, இஞ்சிபூண்டு விழுது, கொ,மல்லிதூள், ம.தூள், பொடித்த சீரக,மிளகு, வெந்தய இலைதூள் போட்டு நன்கு கலந்து வைக்கவும்


 


மிளகாய்தூளில் ஊறிய சிக்கனை பத்து நிமிடங்கள் கழித்து எடுத்து இந்த தயிர் பேஸ்டில் சிக்கனை போட்டு நன்கு கலந்து கடைசியாக ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து  குறைந்தது அரைமணி நேரம் ஊற வைக்கவும்

.
 


அவனில் ட்ரேயில் ஒரு கேரட்டை துண்டு போட்டு அடுக்கி அதன் மேல் சிக்கனை அடுக்கவும்


200 டிகிரியில் 20 நிமிடங்கள் ஹையில் வைக்கவும்.

திரும்ப எடுத்து க்ரில்லில் வைத்து மேலும் 20 நிமிடங்கள் அதே அளவில் வைக்கவும். இப்போது சிக்கன் வெந்திருக்கும்,
எனினும் மறுபடியும் சிக்கனை திருப்பி போட்டு கொஞ்சம் லெமன் ஜூஸை எல்லா சிக்கனிலும் படுமாறு தடவி மீண்டும் 20 நிமிடங்கள் வைக்கவுன்., இவ்வாறு செய்வதால் மசாலா எல்லா இடங்களிலும் சீராக பிடிக்கும், சிக்கனும் சந்தேகமில்லாமல் வெந்திருக்கும். கொஞ்சம் மொறுமொறுப்பும் வாசனையும அதிகரிக்கும்.


 

குறிப்பு

இதற்கு சிக்கன் லெக் பீஸ் நன்றாக இருக்கும்,. ஆனால் இன்னைக்கு அது கிடைக்காததால் இதில் ட்ரை பண்ணினேன்.

தயிர் கெட்டியாக இல்லாவிட்டால் மொறுமொறுப்பு வராது.  மசாலாவும் சிக்கனில் நன்கு சேராது

தேவைப்படுபவர்கள் ஆரஞ்சு கலர் பொடி போட்டுக்கொள்ளவும். முடிந்த வரை அதை தவிர்க்கலாம்

கேரட் வெட்டி வைப்பதால் சிக்கனில் இருந்து வரும் அதிகபட்ச தண்ணீரை கேரட் இழுத்துக்கொள்ளும். அதனால் சீக்கிரம் ட்ரை சிக்கன் வேகும்.


 ஹேப்பி குக்கிங் :)


வெள்ளி, டிசம்பர் 09, 2011

சிக்கன் லாலிபாப்

குழந்தைகளுக்கு பிடித்தது எப்பவுமே மொறுமொறுப்பான எண்ணெயில் பொரித்த உணவுகள் தான். அது சைவமானாலும் அசைவமானாலும். சிக்கன் லாலிபாப் இரண்டு வகையில் செய்யலாம்.  

தேவையான பொருட்கள்
லாலிபாப் - 4
மக்கா சோள மாவு - 200கிராம் 
தயிர் ஒரு பெரிய ஸ்பூன் - கெட்டியான புளிக்காத தயிர்
இஞ்சிபூண்டு விழுது
முட்டை - 2
எலுமிச்சம்பழ ஜூஸ் - ஒரு பெரிய ஸ்பூன்
மிளகாய் தூள்
ஒரு சிட்டிகை ம.தூள்
உப்பு


 செய்முறை

சிக்கன் லாலிபாப்பை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்
ஒரு பெரிய பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக அடித்து அதனுடன், தயிர், இஞ்சிபூண்டு விழுது, மி.தூள், ம.தூள், உப்பு லெமன் ஜூஸ் எல்லாம் சேர்த்து கலந்து வைக்கவும்
அதில் லாலிபாப் போட்டு நன்றாக இந்தகலவையை தடவி குறைந்தது அரைமணி நேரம் வைக்கவும்.


 
ஊறிய லாலிபாப்பை மக்கா சோள மாவில் புரட்டி எடுக்கவும்

வாணலில் எண்ணெய் காயவைத்து ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்
.
அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் மிதமான தீயில் வைத்து பொறிக்கவும்.

குறிப்பு 

லாலிபாப் இல்லாவிட்டால் விங்ஸிலும் செய்யலாம்

அதிக சூட்டில் பொறித்தால் மேல்பகுதி கருகியும் உள்ளே வேகாமலும் இருக்கும்.

இதையே இன்னொரு முறையில் சோளமாவுக்கு பதில் ப்ரெட் தூளில் புரட்டி எடுத்து பொறிக்கலாம்.  

சோளமாவை விட ப்ரெட் தூளின் மொறுமொறுப்பு அதிகம். லேசான இனிப்பு சுவையை தரும்.வியாழன், டிசம்பர் 08, 2011

ஸ்பெஷல் ஸ்டஃப்ட் கத்திரிக்காய்

உருளைக்கிழங்குக்கு அடுத்த படி அதிகம் பயன்படும் காய் கத்திரிதான். பவானி கத்திரிக்காய் கடைசல், பொரியலுக்கு நன்றாக இருக்கும். விதை அதிகம் இருக்காது. பெரிய சைஸ் வயலட் நிற கத்திரி சுட்டு புளி விட்டு பிசைந்த கூட்டு செய்யவும். பிஞ்சு கத்திரி புளிக்குழம்புகளுக்கும், நீளக்கத்திரி பஜ்ஜிக்கும் நன்றாக இருக்கும்.


தேவையான பொருட்கள்

மீடியம் சைஸ் கத்திரிக்காய் - 10
பொரியல் பொடி - 3 ஸ்பூன்
கொத்தமல்லிதூள் - 2 ஸ்பூன்
வறுத்த தேங்காய் - 3 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு தேவையான அளவு
புளித்தண்ணீர் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்


அரைக்க :

தேங்காய், கொத்தமல்லித்தூள், பொரியல் பொடி, ம.தூள், பெருங்காயம், உப்பு இவற்றை புளித்தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்தாளிக்க:
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்
 
செய்முறை
கத்திரிக்காயை காம்பு பகுதி மட்டும் நறுக்கி 6 பகுதிகளாக பிளந்து கொள்ளவும்.

அரைத்த மசாலாவை கத்திரிக்காயின் உட்புறம் ஸ்டஃப் செய்து கால்மணி நேரம் வைக்கவும்


ஒரு வாணலில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்

ஸ்டஃப் செய்த கத்திரிகாய்களை போட்டு நன்றாக வதக்கவும்

சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து சிறிய தீயில் 10 நிமிடம் வேக வைக்கவும்.

நடுவில் லேசாக கிளறிவிடவும்

ஸ்டஃப் செய்த மசாலா வெளியில் கொஞ்சம் வந்திருக்கும், எனவே வெந்த காய்களை சிறிது ஆறவிட்டு மசாலாவை மீண்டும் கத்திரிக்காய்க்குள் வைத்து ஒரே சீராக அடுக்கி மீண்டும் ஒரு முறை 2 நிமிடம் சிறிய தீயில் வைக்கவும்.

குறிப்பு. 
புளித்தண்ணீரில் வேகவைப்பதால் கத்திரிக்காய் விரைவில் வேகும்.

சிறிய தீயில் வேகவைக்காவிட்டால் தீய்ந்துவிடும்.

பொரியல்பொடி என்பது பொட்டுக்கடலை, கொத்தமல்லி, மிளகு,சீரகம்.மிள்காய் கறிவேப்பிலை சேர்ந்த பொடி, இது இல்லாவிட்டால் மிளகாய்தூளும் கொத்தமல்லிதூளுமே போதும்


முடிந்தவரை இது போன்ற சமையலுக்கு நான்ஸ்டிக் உபயோகப்படுத்தாமல் இரும்பு வாணலி உபயோகிக்கவும்.

ஹேப்பி குக்கிங் :)

வெள்ளி, டிசம்பர் 02, 2011

மசாலா ஆம்லெட்/ஃப்ரெஞ்ச் ஆம்லெட்

தானா சமைத்து வீணாக்காமல் சாப்பிடும் மக்களுக்கு இந்த ஆம்லெட். 

தேவையான பொருட்கள்

வேகவைத்து மசித்த உருளைகிழங்கு - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரைகப்
தக்காளி பொடியாக நறுக்கியது - கால் கப்
பச்சைமிளகாய், கொத்தமல்லிதழை மிகப்பொடியாக நறுக்கியது.
முட்டை - 3
மிளகு பொடி - ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு


செய்முறை

முட்டையை உப்பு, மிளகாய்தூள் சேர்த்து
நன்றாக நுரை வரும்படி அடித்துக்கொள்ளவும்

ஒரு நான் ஸ்டிக் பானில் சிறிது
எண்ணெய் தடவி முட்டையை ஒரு
லேயர் ஊற்றவும்
அதன் மேல் வெங்காயம், தக்காளி,உருளைக்கிழங்கு, மல்லித்தழைம்
சிறிது மிளகுதூள் தூவி அதன் மேல்  இன்னொரு லேயர் முட்டையை ஊற்றவும்.

 

மிக சன்னமான தீயில் மூடி போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும்
மறுபடியும் திருப்பி போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
பொன்னிற ஆம்லெட் நல்ல வாசனையோடு ரெடிகுறிப்பு

இந்த ஆம்லெட் ஒரு ஃபுல் மீல் வகையை சார்ந்தது. அப்படின்னா இதுக்கு முன்னாடி பின்னாடி எதுவும் சாப்பிட தேவையில்லைன்னு அர்த்தம்.

துண்டுகளாக கட் பண்ணி  ப்ரெட் ஆம்லெட் செய்யலாம்

மூடி வைப்பதாலும் சன்னமான தீயில் வேகவைப்பதாலும் முட்டை நன்கு வெந்தும் உருளைகிழங்கு மிருதுவாகவும் இருக்கும்


  
ஹேப்பி குக்கிங் :)