செவ்வாய், ஜனவரி 21, 2014

திருவையாறு அசோகா அல்வா

 
 
என்ன தேவை
பாசிபருப்பு(பயற்றம் பருப்பு) : ஒரு கப்
கோதுமை மாவு :  ஒரு கப்பிற்கு இரண்டு டேபிள் ஸ்பூன் குறைவாக எடுக்கவும்
மைதாமாவு : இரண்டு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை : மூன்று கப்
நெய் : ஒன்றரை கப்
ஏலக்காய் பொடி : கால் டேபிள் ஸ்பூன்
முந்திரி : 50 கிராம்
திராட்சை : 20  கிராம்
ஆரஞ்சு கேசரி பவுடர் : ஒரு சிட்டிகை

எப்படி செய்வது :

கோதுமைமாவுடன் மைதா மாவை சேர்த்து சலித்து வைக்கவும்

பாசி பருப்பை வாசனை வரும் வரை வெறும் வாணலியில் வறுத்து கழுவி வைக்கவும்
ஒரு பாத்திரத்தில் பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நிதானமான தீயில் வேகவிடவும்
இன்னொரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் நெய்யை விட்டு அதில் முந்திரி திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்
அந்த நெய்யில் கோதுமை மைதா மாவுகலவையை சேர்த்து வறுக்கவும், நிதானமான தீயில் கைவிடாமல் கிளறி வறுக்க வேண்டும். ஒரு கட்டத்தில் மாவு பொன்னிறமாகி நன்கு வாசனை வரும்
இந்த பதத்தில் வேகவைத்த பருப்பை சேர்த்து கிளறவும். பருப்பு நன்கு மசிந்து மாவுடன் கலக்கும் போது சர்க்கரையையும் கேசரி பவுடரையும் சேர்த்து  கைவிடாமல் கிளறவும். பாத்திரத்தின் ஓரம் ஒட்டாமல் சுருண்டு அல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையும் ஏலக்காய் பவுடரும் மீதமுள்ள நெய்யும் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான அசோகா அல்வா சிரமமின்றி தயார்.

கவனிக்க வேண்டிய குறிப்புகள்
மைதாவிற்கு பதில் சர்க்கரை சேர்த்தாத கோவா சேர்க்கலாம்
கைவிடாமல் கிளறவேண்டும் என்பது எல்லா வகையான அல்வாக்களுக்கும் பொதுவானது. கட்டிதட்டாமல் இருக்கவே கிளறிவிடவேண்டும்
ஆரஞ்சு கேசரி பவுடர் முற்றிலும் தனிப்பட்ட விருப்பத்திற்கானது. அதனை தவிர்த்தாலும் சுவையில் குறையாது