பாரம்பரிய உணவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரம்பரிய உணவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 07, 2013

சாமை கல்கண்டு பாத்



சாமை அரிசி ஒரு கப்
பயத்தம் பருப்பு : அரை கப்
நெய் : இரண்டு ஸ்பூன்
கல்கண்டு : முக்கால் கப்
திராட்சை, முந்திரி : ஒரு பெரிய ஸ்பூன்
தண்ணீர் : 4 கப்


எப்படி செய்வது
பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்
சாமையும் பருப்பும் கழுவி குக்கரில் 6 விசில் வேகவிடவும்
கல்கண்டை மிக்ஸியில் பொடித்து வைக்கவும்
வாணலில் நெய் காயவைத்து திராட்சை முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும்
சாமை சாதத்துடன் கல்கண்டு பொடியும் போட்டு நன்கு கிளறவும், முந்திரி திராட்சை சேர்க்கவும். தேவைப்படின் இன்னும் சிறிது நெய் சேர்க்கவும். சூடாக பரிமாறவும்

குறிப்பு:
தண்ணீருக்கு பதில் தண்ணீரும் பாலுமாக சேர்த்து வேக விட்டால் இன்னும் சுவை கூடும்