ஞாயிறு, மார்ச் 23, 2014

போஹ்ரி கிச்சடி / Bohri kichadi










போஹ்ரி கிச்சடி
என்ன தேவை
வேகவைத்த பாசுமதி சாதம் : ஒரு கப்
வேக வைத்த துவரம் பருப்பு : ஒரு கப்
போஹ்ரி மசாலா செய்ய தேவையானவை
 அரைக்க :
பூண்டு : 5 பல்
பெரிய வெங்காயம் : ஒன்று
சீரகம் : கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் : 3
வரமிளகாய் ஃப்ளேக்ஸ் : ஒரு டி.ஸ்பூன் - இவை அனைத்தும் விழுதாக அரைக்கவும்
தாளிக்க

நீளவாக்கில் பெரிய வெங்காயம் : இரண்டு கப்
கரம் மசாலா தூள் : அரை டிஸ்பூன்
லோ ஃபேட் தயிர் கால் கப்
உப்பு : தேவையான அளவு
சர்க்கரை ஒரு சிட்டிகை
எண்ணெய் : ஒரு ஸ்பூன்
பால் : ஒரு டேபிள் ஸ்பூன்
எப்படி செய்வது
கடாயில் எண்ணெய் விட்டு ஒன்றரை கப் வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் நன்கு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவேண்டும். வறுத்த வெங்காயத்தை தனியே எடுத்து வைக்கவும்
அதே கடாயில் மீதி வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்த விழுது சேர்க்கவும்.
விழுது கெட்டியானவுடன் தயிர், உப்பு, சர்க்கரை சேர்த்து கெட்டியான க்ரேவி பதத்தில் செய்யவும்.

போஹ்ரி செட் செய்ய
சாதம் மற்றும் பருப்பை ஒன்றாக உப்பு சேர்த்து கலக்கவும்.
எண்ணேய் தடவிய ஒரு ட்ரேயில் வறுத்த வெங்காயம் சிறிது பரவலாக தூவவும்
பாதி சாத பருப்பு கலவையை பரப்பவும்
போஹ்ரி க்ரேவியை சாதத்தின் மேல் பரவலாக பரப்பவும்
மீதி சாதத்தை க்ரேவி மேல் பரப்பவும்
மீதமுள்ள வெங்காயத்தை தூவவும்
பாலை மேலே பரவலாக ஊற்றவும்

ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில் 5 நிமிடம் 180 டிகிரியில் வைத்து எடுத்து  பரிமாறவும்
*அவன் இல்லாவிட்டால் இதே போன்று செட் செய்யவும், நன்று இறுக்கமாக செட் பண்ணவேண்டும். இட்லி பானையில் சிறிது வைத்து எடுக்கலாம். செட் பண்ண மட்டுமே சூடு படுத்துகிறோம். பாலுடன் சிறிது குங்குமப்பூ சேர்க்கலாம்.