வெள்ளி, டிசம்பர் 16, 2011

வெங்காய பூண்டு புளிக்குழம்பு

புளிக்குழம்புக்கு இணையான ருசியான உணவு எதுவும் இல்லை. சூடான சாதம் அதில் புளிக்குழம்பு கூடவே சின்ன உருளைக்கிழங்கு வறுவல்.. ம்ம்ம் நல்ல காம்பினேசன். கொஞ்சம் கேரட் பச்சடியும் இருந்தா இன்னும் சூப்பர்.

தேவையான பொருட்கள்


சின்ன வெங்காயம் - ஒரு கப்
பூண்டு - அரை கப்
புளி கரைசல் கெட்டியாக கரைத்தது - அரைகப்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிள்காய் தூள் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லித்தூள் - ரெண்டு ஸ்பூன்
ஒரு துளி பெருங்காயம்




அரைக்க 
தேங்காய் - இரண்டு பெரிய ஸ்பூன்
வெந்தயம் - சிறிது

தாளிக்க 
கடுகு - சிறிது
வெந்தயம் - சிறிது
சீரகம் - ஒரு சிட்டிகை
வரமிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம், மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்


 


புளி கரைசலை ஊற்றி ஒரு கொதி வந்ததும், மி.தூள், ம.தூள், கொ.மல்லிதூள். பெருங்காயம் உப்பு போட்டு இன்னொரு கொதி விடவும்


 


இப்போது குழம்பு சிறிது கெட்டிப்பட்டதும் தேங்காய் விழுது சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்.





குறிப்பு

தாளிக்க சன்ஃபளவர் ஆயிலை விட நல்லெண்ணெய் நல்லது

தேங்காய் தேவைப்பட்டால் போடலாம். அளவு குறைவாக வேண்டும் எனில் தேங்காய் தேவையில்லை. முடிந்தவரை தவிர்க்கலாம்.

வெந்தயம் போட்டு தாளித்தால் மட்டுமே புளிக்குழம்பின் மணம் வரும்.

மண்சட்டியில் செய்வதால் இரண்டு நாட்களுக்கு கூட ஃப்ரிட்ஜில் வைக்காமல் வைத்துக்கொள்ளலாம்.
 

ஹேப்பி குக்கிங்




4 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>தேங்காய் - இரண்டு பெரிய ஸ்பூன்

மேடம், எங்க வீட்ல ஒரே ஒரு ஸ்பூன்தான் இருக்கு, என்ன பண்ண?

விஜி சொன்னது…

செந்தில் ஒண்ணும் பிரச்சனை இல்லைங்க. கலர் ஜெராக்ஸ் எடுத்துடுங்க

Suresh Subramanian சொன்னது…

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...www.rishvan.com

இராம்குமார் சொன்னது…

நல்ல சுவையான குறிப்பு

கருத்துரையிடுக

நான் டெஸ்டும் டேஸ்டும் பண்ணியாச்சு, நீங்க ?