வியாழன், டிசம்பர் 08, 2011

ஸ்பெஷல் ஸ்டஃப்ட் கத்திரிக்காய்

உருளைக்கிழங்குக்கு அடுத்த படி அதிகம் பயன்படும் காய் கத்திரிதான். பவானி கத்திரிக்காய் கடைசல், பொரியலுக்கு நன்றாக இருக்கும். விதை அதிகம் இருக்காது. பெரிய சைஸ் வயலட் நிற கத்திரி சுட்டு புளி விட்டு பிசைந்த கூட்டு செய்யவும். பிஞ்சு கத்திரி புளிக்குழம்புகளுக்கும், நீளக்கத்திரி பஜ்ஜிக்கும் நன்றாக இருக்கும்.


தேவையான பொருட்கள்

மீடியம் சைஸ் கத்திரிக்காய் - 10
பொரியல் பொடி - 3 ஸ்பூன்
கொத்தமல்லிதூள் - 2 ஸ்பூன்
வறுத்த தேங்காய் - 3 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு தேவையான அளவு
புளித்தண்ணீர் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்






அரைக்க :

தேங்காய், கொத்தமல்லித்தூள், பொரியல் பொடி, ம.தூள், பெருங்காயம், உப்பு இவற்றை புளித்தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்



தாளிக்க:
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்
 
செய்முறை
கத்திரிக்காயை காம்பு பகுதி மட்டும் நறுக்கி 6 பகுதிகளாக பிளந்து கொள்ளவும்.

அரைத்த மசாலாவை கத்திரிக்காயின் உட்புறம் ஸ்டஃப் செய்து கால்மணி நேரம் வைக்கவும்


ஒரு வாணலில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்

ஸ்டஃப் செய்த கத்திரிகாய்களை போட்டு நன்றாக வதக்கவும்

சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து சிறிய தீயில் 10 நிமிடம் வேக வைக்கவும்.

நடுவில் லேசாக கிளறிவிடவும்

ஸ்டஃப் செய்த மசாலா வெளியில் கொஞ்சம் வந்திருக்கும், எனவே வெந்த காய்களை சிறிது ஆறவிட்டு மசாலாவை மீண்டும் கத்திரிக்காய்க்குள் வைத்து ஒரே சீராக அடுக்கி மீண்டும் ஒரு முறை 2 நிமிடம் சிறிய தீயில் வைக்கவும்.

குறிப்பு. 
புளித்தண்ணீரில் வேகவைப்பதால் கத்திரிக்காய் விரைவில் வேகும்.

சிறிய தீயில் வேகவைக்காவிட்டால் தீய்ந்துவிடும்.

பொரியல்பொடி என்பது பொட்டுக்கடலை, கொத்தமல்லி, மிளகு,சீரகம்.மிள்காய் கறிவேப்பிலை சேர்ந்த பொடி, இது இல்லாவிட்டால் மிளகாய்தூளும் கொத்தமல்லிதூளுமே போதும்


முடிந்தவரை இது போன்ற சமையலுக்கு நான்ஸ்டிக் உபயோகப்படுத்தாமல் இரும்பு வாணலி உபயோகிக்கவும்.

ஹேப்பி குக்கிங் :)

2 கருத்துகள்:

விச்சு சொன்னது…

மசாலாவைப் பார்த்தவுடனே ம்ம்ம்...ஆஆஆ...இதுக்கு மேலே வாயைத் திறந்தால் எச்சில் வடிஞ்சுரும்.

சுசி சொன்னது…

இங்க வந்த புதுசில.. டிவில பாத்திட்டு இத செஞ்சு.. அது நறுக் நறுக்னு வந்து.. மாம்ஸ் கிண்டல் பண்ணி.. நான் அழுது.. இதுதான் சாக்குன்னு அப்பறம் செய்யாமலே விட்டேன்..

இப்டி குட்டியா கத்திரி இங்க வாங்குறது கஷ்டம்.. கிடைச்சா ட்ரை பண்ணிட்டு சொல்றேன் :)

கருத்துரையிடுக

நான் டெஸ்டும் டேஸ்டும் பண்ணியாச்சு, நீங்க ?