வெள்ளி, டிசம்பர் 09, 2011

சிக்கன் லாலிபாப்

குழந்தைகளுக்கு பிடித்தது எப்பவுமே மொறுமொறுப்பான எண்ணெயில் பொரித்த உணவுகள் தான். அது சைவமானாலும் அசைவமானாலும். சிக்கன் லாலிபாப் இரண்டு வகையில் செய்யலாம்.  

தேவையான பொருட்கள்
லாலிபாப் - 4
மக்கா சோள மாவு - 200கிராம் 
தயிர் ஒரு பெரிய ஸ்பூன் - கெட்டியான புளிக்காத தயிர்
இஞ்சிபூண்டு விழுது
முட்டை - 2
எலுமிச்சம்பழ ஜூஸ் - ஒரு பெரிய ஸ்பூன்
மிளகாய் தூள்
ஒரு சிட்டிகை ம.தூள்
உப்பு


 



செய்முறை

சிக்கன் லாலிபாப்பை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்
ஒரு பெரிய பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக அடித்து அதனுடன், தயிர், இஞ்சிபூண்டு விழுது, மி.தூள், ம.தூள், உப்பு லெமன் ஜூஸ் எல்லாம் சேர்த்து கலந்து வைக்கவும்




அதில் லாலிபாப் போட்டு நன்றாக இந்தகலவையை தடவி குறைந்தது அரைமணி நேரம் வைக்கவும்.


 




ஊறிய லாலிபாப்பை மக்கா சோள மாவில் புரட்டி எடுக்கவும்





வாணலில் எண்ணெய் காயவைத்து ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்
.
அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் மிதமான தீயில் வைத்து பொறிக்கவும்.





குறிப்பு 

லாலிபாப் இல்லாவிட்டால் விங்ஸிலும் செய்யலாம்

அதிக சூட்டில் பொறித்தால் மேல்பகுதி கருகியும் உள்ளே வேகாமலும் இருக்கும்.

இதையே இன்னொரு முறையில் சோளமாவுக்கு பதில் ப்ரெட் தூளில் புரட்டி எடுத்து பொறிக்கலாம்.  

சோளமாவை விட ப்ரெட் தூளின் மொறுமொறுப்பு அதிகம். லேசான இனிப்பு சுவையை தரும்.



7 கருத்துகள்:

Vidhya Chandrasekaran சொன்னது…

நான் வீட்ல சமைக்கப் போற முதல் சிக்கன் ஐட்டம் இதுவாக இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

btw நீங்க அசைவம் சாப்பிடுவீங்களா?

விஜி சொன்னது…

வித்யா ஒரு காலத்தில் சாப்பிட்டேன். இப்ப 15 வருசமா சைவம்தான். சாப்பிடாட்டி என்ன? நல்லா சமைச்சா போதாதா? :)

விச்சு சொன்னது…

லாலிபாப் செய்முறை விளக்கம் சூப்பர்.

பெயரில்லா சொன்னது…

ஆஹா காலையிலேயே இந்த பக்கம் வந்தது தப்பா போச்சே. நாளைக்கு தான் செய்ய முடியும்...

dsfs சொன்னது…

very super ka. I ll try it. Thanks for nice tips.

anandrajah சொன்னது…

என்னாது நீங்க சாப்பிட மாடீன்களா அப்ப.. அந்த மனித வதை, Best of luct....நாங்க தானா..! Today i prepare "கத்திரிக்காய் ஸ்டுப் ..! புளி அதிகமாயிடுச்சா.. ஹீ ஹீ.. பரவாயில்லே..! தாலி கட்டின பாக்கியம் தப்பிச்சேன்..! AS to day is Saturday.. Aanjaneya not allow my wife to have Chikken..! Tomorrow.. we try it.

anandrajah சொன்னது…

ஒரு சின்ன திருத்தம்.. பண்ணலாமா..

வித் யுவர் கைண்ட் பெர்மிச்சியன்.. !
மக்காச்சோள மாவில் புரட்டி எடுக்க வேணாம். கொஞ்சம் கலந்தாலே போதும்.
கலர் சேத்துக்கலாம் , வாணலியில் போடும் முன்..! மத்தபடி முட்டை போட்டு பண்றது சூப்பரு !!

கருத்துரையிடுக

நான் டெஸ்டும் டேஸ்டும் பண்ணியாச்சு, நீங்க ?