புதன், டிசம்பர் 18, 2013

மைசூர்பா (கிருஷ்ணா ஸ்விட்ஸ்)


 தேவையானவை
கடலை மாவு : ஒரு கப்
சர்க்கரை : மூன்று கப் ( அதிகம் இனிப்பு வேண்டாதவர்கள் இரண்டரை கப் கூட வைத்துக்கலாம்)
நெய் : 3 கப்

எப்படி செய்வது

அடிகனமான வாணல் (அல்லது பிரஷர் பேன் கூட நல்லது) சர்க்கரையை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு சூடாக்கவும்
ஒரு சதுரமான ட்ரேவில் நெய் தடவி எடுத்து அருகில் வைக்கவும்
கடலைமாவை சலித்து வைத்துக்கொள்ளுங்கள்

சர்க்கரை கரைந்ததும் வடிகட்டியில் வடித்து மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும்
ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பை குறைத்து கடலை மாவை கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும்
மூன்று கப் நெய்யில் கால் கப் தவிர மீதத்தை சிறிது சிறிதாக ஊற்றி விடாமல் கிளறவும். இப்போது அடுப்பை நிதானமாக எறிய விட வேண்டும்
ஒட்டாமல் மைசூர்பா பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி கீழே வைத்து மீண்டும் ஐந்து நிமிடம் கிளறவும்.
இந்த ஸ்டேஜில் ஒரு நிமிடம் கிளறுவதை நிறுத்தி மீதமிருக்கும் நெய்யை சேர்த்து மீண்டும் இரண்டு நிமிடம் நன்கு கிளறி ட்ரேவில் கொட்டவும்
சிறிது நேரம் ஆறவிட்டு விரும்பிய அளவில் துண்டு போடவும்

அது என்ன மைசூர்பா பதம்?
ஸ்டேஜ்  1 : கடலை மாவை நன்கு பாகுடன் கிளறவும்
ஸ்டேஜ் 2:  கடலை மாவு பாகு + நெய்யுடன் சேர்ந்து வேக ஆரம்பிக்கும் ஊற்றும் நெய் அனைத்தையும் உறிஞ்சும்
ஸ்டேஜ் 3: லேசாக ஓரங்களில் நுரைக்கும், கொதி வரும்
ஸ்டேஞ் : 4 கலர் மாறி லேசான வெள்ளை நிறமாகவும் ஓரங்களில் நன்கு நுரைத்தும் வரும்
ஸ்டேஜ் 5 : இப்படி கலர் மாறியதும் பால் பொங்குவது போல் லேசாக பொங்கி வரும். இதுதான் மைசூர்பா பதம். இப்போது இறக்கி வைத்து கைவிடாமல் அந்த பாத்திர சூட்டில் ஐந்து நிமிடம் கிளறவும்
ஸ்டேஜ் : 6 கிளறுவதை நிறுத்தி நெய் விட்டு ஒரு நிமிடம் அப்படியே விடவும், பின் மீண்டும் 2 நிமிடம் கிளறி ட்ரேக்கு மாற்றுங்கள். மைசூர்பா செய்வதில் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள் மற்றும் தவறவிடக்கூடாதவை இவை.
அளவு மிக முக்கியம், நெய் மட்டுமே உபயோகித்தும் மைசூர்பா செய்யலாம்.  அவ்வளவு நெய் தேவையில்லை என்றால் மூன்றில் ஒரு பங்கு சன் ப்ளவர் ஆயில் சேர்க்கலாம். அதே சாப்டான பதம் வரும்.
பாகு அளவும் பதமும் தவற விடக்கூடாதது. சர்க்கரை தண்ணீரில் கலந்ததும் அதனை வடிகட்டி மீண்டும் பாகு செய்ய வைத்தல் நலம். இதனால் சர்க்கரையில் இருக்கும் தூசு, கசடுகள் கழிக்கலாம்
முதலில் பிசுபிசுப்பாபாகு, பின் கால் கம்பி, அரைக்கம்பி, அடுத்து ஒரு கம்பி பதம் வரும். இதுவே சரியான மைசூர்பா பதம். 
கொட்டி கிளறும் போது அதனை சிறிது ஆறவிடுதலும் கீழ் இறக்கி வைத்து கிளறி மீண்டும் கொஞ்சம் நெய்விடுதலும் அவசியம்.
எந்த கப்பில் மாவை எடுக்கிறிர்களோ அதே கப்பில் சர்க்கரை, நெய் எடுப்பது கொஞ்சம் ஈசியானது


பி.கு. குங்குமம் தோழி இதழில் வெளியான கிருஷ்ணா ஸ்விட் மைசூர்பா சீக்ரெட் கிச்சன்

3 கருத்துகள்:

Menaga sathia சொன்னது…

thxs for sharing akka,will try it soon!!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாவ்...! சூப்பர்...!! செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

Vasudevan Tirumurti சொன்னது…

அடுத்து ரெசிபி .. உடைக்க முடியாத மைசூர்பா செய்வாங்கன்னு நினைக்கிறேன்.

கருத்துரையிடுக

நான் டெஸ்டும் டேஸ்டும் பண்ணியாச்சு, நீங்க ?