செவ்வாய், நவம்பர் 29, 2011

வெங்காய சமோசா / பப்ஸ்

பப்ஸ் என்று பொதுவில் சொல்லப்படும் வெங்காய சமோசா எல்லாருக்கும் பிடித்த சிற்றுண்டி. இதில் நடுவில் வைக்கப்படும் பூரணம்./ஸ்டஃபிங் உங்கள் விருப்பபடி  மாற்றிக்கொள்ளலாம்.

மேல் மாவுக்கு தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு கப்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் ஒரு பெரிய டேபிள் ஸ்பூன்

சப்பாத்தி மாவு பதத்திற்கு சிறிது கெட்டியாக மாவு பிசைந்து குறைந்தது அரைமணி நேரம் மூடிவைக்கவும்.

ஸ்டஃபிங்
பெரிய வெங்காயம் -6 -மிகப்பொடியாக நறுக்கியது
எலுமிச்சம்பழ ஜூஸ் - ஒரு ஸ்பூன்
மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்
கரம்மசாலாதூள்- அரை ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லிதழை- பொடியாக நறுக்கியது
இவை அனைத்தும் பச்சையாக கலந்து வைக்கவும். வெங்காயம் வதக்க தேவையில்லை.



சமோசா செய்முறை


1. மைதா மாவு ஒரு ஸ்பூன் எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பசை போல 
  கலந்து வைக்கவும்

2. மேல்மாவை சிறிது எடுத்து மிக மெல்லிய சப்பாத்தியாக இட்டு அடுப்பில் மிக லேசாக சூடு பண்ணவும். வேக வைக்க வேண்டாம். லேசாக சூடுபடுத்தினால் அதை மடிப்பது சுலபமாகும், ஒன்றோடு ஒன்று ஒட்டாது.








3.ஒரு சப்பாத்தியை இரண்டாக வெட்டி முனையை சுற்றிலும் மைதா பேஸ்ட் தடவவும், அதை ஒரு முனையில் இருந்து சுற்றினால் முக்கோன வடிவம் வரும்





4.உள்ளே வெங்காய மசாலாவை வைத்து மைதா பேஸ்ட் தடவி மடிக்கவும்.





5.எல்லா சமோசாவும் தயார் செய்த பிறகு எண்ணெய் காய வைத்து பொரித்து எடுக்கவும்







குறிப்பு

1.எண்ணெய் அதிக சூடாக இருக்க கூடாது, அப்படி இருந்தால் சமோசா கருகி விடும், உள்ளே இருக்கும் வெங்காயம் வதங்காது




2.ஒரு முறை பொரித்து எடுத்த பின் மறுபடியும் 5 நிமிடம் கழித்து  மறுபடியும் பொரித்தால் அழகான பொன் நிறத்தில் இன்னும் மொறுமொறுப்பாக இருக்கும்.

3.ஸ்டப் செய்ய உருளைகிழங்கு, கேரட், பட்டாணி எது வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.


 ஹேப்பி குக்கிங் :)






11 கருத்துகள்:

வெண்பூ சொன்னது…

ரெசிப்பிக்கு நன்றி... ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்றேன்.

வெங்காய சமோசாவை பப்ஸுன்னு சொல்லுவீங்களா, எங்களுக்கு எல்லாம் பேக்கரியில கிடைக்குறது மட்டும்தான் பப்ஸ். இது வெங்காய சமோசா, இன்னொன்னு உருளைக்கிழங்கு சமோசா..

விஜி சொன்னது…

வெண்பூ, இன்னும் சில இடங்களில் அப்படி சொல்லுவாங்க, மேலும் தேடுதலின் போது ஈசியா இருக்கட்டும்னு தான் அந்த பேரும் போட்டு வச்சேன் :)

பெயரில்லா சொன்னது…

ரொம்ப நாளா செய்ய நினைச்சதுண்டு சோம்பேறி தனம் செய்ததில்லை..இந்த முறை செய்றேன்.. தின்னதும் உயிரோடு இருக்க ஆசிர்வதிங்க...

dsfs சொன்னது…

Super Pa

சாகம்பரி சொன்னது…

புகைப்படங்கள் சிறப்பாக விளக்குகின்றன.

K.Arivukkarasu சொன்னது…

செய்முறை சூப்பர் [லேசாக சூடுபடுத்தினால் அதை மடிப்பது சுலபமாகும், ஒன்றோடு ஒன்று ஒட்டாது]. படங்களும் சூப்பர். செய்தும் குடுத்துட்டிங்கன்னா சாப்பிட்டுவிட்டு சொல்வோம்,சூப்பரோ சூப்பர் ! :-)

விஜி சொன்னது…

டமிலு, என்னைக்கு நீ சொன்னதை செய்திருக்கே.. சீக்கிரம் சாப்பிட்டு ரிசல்ட் சொல்லு :)

விஜி சொன்னது…

பொன்மலர் தேங்க்ஸ்பா

விஜி சொன்னது…

சாகம்பரி .. போட்டா மட்டும்தானா :)))

விஜி சொன்னது…

அறிவுக்கரசு சார் வாங்க வீட்டுக்கு :)

Unknown சொன்னது…

good article.

கருத்துரையிடுக

நான் டெஸ்டும் டேஸ்டும் பண்ணியாச்சு, நீங்க ?